தமிழ் சினிமாவின் அதிரடி இசை அமைப்பாளர் அனிருத். அவர் இசையமைத்த முதல் படமான “3” இவர் மீது திரைத்துறை கவனத்தைத் திருப்ப காரணமானது. தொடர்ந்து அவர் இசைமயத்த படங்களின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.
இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ், தான் இயக்கும் படத்தில் நடிக்கும்படி அனிருத்தை அணுகினார். முதலில் மறுத்த அனிருத் பிறகு கதை கேட்க சம்மதித்தார். விக்னேஸ் சிவனும் கதையைச் சொன்னார்.
ஆனால் பிறகு நடிக்க மறுத்துவிட்டார் அனிருத். தான் இசை அமைப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதே சரியாக இருக்கும் என சொல்லிவிட்டார்.
அதன் பிறகுதான் விக்னேஸ் சிவன், அதே கதையை விஜய் சேதுபதியிடம் சொல்லி கால்சீட் வாங்கினார். அதுதான் “நானும் ரவுடிதான்” திரைப்படம். ஆனால் இதற்கு அனிருத் இசையமைத்தார்.
இது குறித்து அனிருத் சொல்லும்போது, “இரு துறைகளில் ஈடுபட்டு வெற்றி காண்பவர்கள் உண்டு. ஆனால் என்னால் அது முடியுமா என்று தெரியவில்லை. இந்த நிலையில் இசையில் மட்டும் கவனம் செலுத்துவதுதான் சரி என நினைத்தேன். அதனாலேயே நடிக்க மறுத்தேன்” என்றார்.
தெரிந்த தொழிலை விட்டவணும் கெட்டான்..தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்பார்கள்.
இதை உணர்ந்த அனிருத் தெளிவான மனிதர்தான்.