Friday, August 16, 2024

கேஎஸ் ரவிக்குமாருடன் சண்டை!: சேரன் ஓப்பன் டாக்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். இவரிடம் உதவியாளராக இருந்த பலர், இயக்குநராக வெற்றிபெற்று உள்ளனர். அவர்களில் ஒருர் சேரன்.

சமீபத்தில் இவர், “1990ல்  கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி முதல் படமான  புதிரில் அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன். தொடர்ந்து அவரது, பாண்டியன்,  நாட்டாமை உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்தேன்.

ஆனால் மன வருத்தம் காரணமாக விலகிவிட்டேன். ஆனால் வறுமை காரணமாக, மீண்டும் அவரிடம் சேரலாம் என சென்றேன். அவரும் பெரிய மனதுடன் சேர்த்துக்கொண்டார்.  இப்படி அவரிடமிருந்து விலகுவதும், சேர்வதுமாக இருந்தது.

இப்போது நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.. என் மீது ஏதோ ஒரு பிரியத்தால் மீண்டும் மீண்டும் என்னை சேர்த்துக்கொண்டு இருக்கிறார்” என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் சேரன்.

 

- Advertisement -

Read more

Local News