தமிழ் சினிமாவில் பலர் எடுக்கத் தயங்கிய கதைகளைக் கூட வெற்றி படங்களாக கொடுத்தவர் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன், ஆகிய திரைப்படங்கள் மூலம் நிஜங்களை திரையில் ரசிகர்களுக்கு காட்டியவர்.
நடிகை ஆண்ட்ரியா படம் குறித்து வெற்றிமாறனை முதன் முதலில் பார்க்க சென்றுள்ளார். இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது தொடர்ந்து புகை பிடித்து கொண்டே இருந்துள்ளார். அந்த புகை காரணமாக ஆண்ட்ரியா கண்ணில் தண்ணீர் வந்து விட்டதாம். அதற்கு மேல் பேச முடியாமல் நான் உங்களை இன்னோரு நாள் பார்க்கிறேன் என்று கிளம்பி விட்டாராம்.
என் முதல் சந்திப்பு அப்படி தான் இருந்தது. அதன் பிறகு வட சென்னை படத்தில் என்னை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
இப்போது வெற்றி சார் தொடர்ந்து புகைப்பதை குறைத்து விட்டார். என்று ஒரு பேட்டியில் கூறினார் ஆண்ட்ரியா.