Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

“ஹீரோக்களுடன் நெருக்கமாக நடித்ததால்தான் நயன்தாரா பேமஸானார்…” – நடிகை ஆண்ட்ரியாவின் கணிப்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“பெரிய நடிகர்களுடன் நெருக்கமாக நடித்தாலேயே நயன்தாரா புகழடைந்தார்..” என்று நடிகை ஆண்ட்ரியா கருத்துத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இப்போதும் இருந்து வரும் நடிகை ஆண்ட்ரியா. இவர், நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் இருக்கிறார்.  ‘வடசென்னை’ ‘தரமணி’ போன்ற படங்களில் தனது வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டைப் பெற்றவர்.

தற்போது விஜய்யின் மாஸ்டர்’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மிஷ்கின் இயக்கவுள்ள ‘பிசாசு-2’ படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா பேசும்போது ‘லேடி சூப்பர் ஸ்டாரான’ நயன்தாரா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

ஆண்ட்ரியா பேசும்போது, “தமிழ்த் திரையுலகத்தில் நடிகைகள் முன்னணி கதாநாயகியாக வளர்வதற்கு அவர்கள் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அப்போதுதான் இவர், இந்த நடிகரின் படத்தில் நடித்த நடிகை என்று ரசிகர்களால் அடையாளம் காண முடிகிறது.

நடிகை நயன்தாராவின் வளர்ச்சிக்கு ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தேவைப்பட்டது. அதோடு, அந்தப் படங்களின் ஹீரோக்களோடு நயன்தாரா மிக நெருக்கமாக நடித்திருந்தார். அதனால்தான் அவருக்குப் பெயரும், புகழும் கிடைத்தது.

ஆனால், என்னுடைய வளர்ச்சிக்கு சிறந்த படங்களின் கதைகள் மட்டுமே தேவைப்பட்டது. நான் நடிக்கின்ற படங்களில் கதை நன்றாக இருக்கிறதா என்று மட்டுமே பார்ப்பேன். கதைக்குத் தேவையென்றால் மட்டும்தான், நான் நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்கிறேன்..” என்று பேசியிருக்கிறார்.

“ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடித்ததால்தான் நயன்தாரா பெரும் புகழடைந்தார்..” என்று ஆண்ட்ரியா தெரிவித்த சர்ச்சை கருத்து நயன்தாரா ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது.

“ரஜினி, விஜய், அஜீத்துடன் நடித்த பல நடிகைகள் தற்போது திரை உலகை விட்டு காணாமல் போயுள்ள நிலையில், நயன்தாராவின் வெற்றிக்கு இது ஒன்றை மட்டுமே காரணமாக ஆண்ட்ரியா குறிப்பிட்டுள்ளது தவறு…” என்று நயன்தாரா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்

மேலும் ஆண்ட்ரியாவும் கமல், அஜித், விஜய், விஷால், சரத்குமார், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுடன் மிக நெருக்கமாக நடித்து உள்ளதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

“குந்தி தேவி பிள்ளை பெற்றாள் என்ற செய்தியைக்  கேட்டவுடன், அம்மிக் குழவியை எடுத்து அடிவயிற்றில் அடித்துக் கொண்டாளாம் காந்தாரி…” என்ற முதுமொழிதான் நினைவுக்கு வருகிறது..!

- Advertisement -

Read more

Local News