நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் இவர் தமிழ் மொழியில் மட்டும் 250 படங்களுக்கும் மேல் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவரது சிறந்த நடிப்புக்கான விருதுகள், கவுரவங்கள் பல கிடைத்து உள்ளன.
இந்த நிலையில் சிவாஜி கணேசனின் பழைய பேட்டி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், “நயாக்ராசிட்டி மேயர் இந்தியாவிலிருந்து இதுவரை இரண்டு பேரை தான் அழைத்து இருக்கிறார்கள். ஒன்று நேருஜி, இன்னொன்று இந்த புவர் சிவாஜி. அது மட்டும் இல்லாமல் அவர்கள் எனக்கு தங்க சாவி ஒன்றையும் கொடுத்திருக்கிறார்கள். இதை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்றார்.