Wednesday, September 18, 2024

Goodbye Captain!:  கார்ட்டூன் வெளியிட்டு அஞ்சலி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், கடந்த 28ம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்தார்.  72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில்  அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரையிலான இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் தங்கள் கேப்டனுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

இதனிடையே, அமுல் நிறுவனம் உருக்கமான கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. அமுல் சிறுமி ‘குட்பை கேப்டன்’ எனச் சொல்லும் அந்தக் கார்ட்டூனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்நிறுவனம் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மிகவும் நேசித்த தமிழ் நடிகர் – அரசியல் தலைவருக்கு அஞ்சலி” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

- Advertisement -

Read more

Local News