Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

டப்பிங் மிஷன்-ஐ வெற்றிகரமாக முடித்த அமரன்… ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட படக்குழு! #AMARAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் “அமரன்”. இந்த படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

திரைப்படத்தில் “முகுந்தன்” எனும் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றுபவராகக் கதையில் காட்டப்பட்டுள்ளார். இந்த படம், மறைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்தன் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

“அமரன்” திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் முடித்துவிட்டார், மற்றும் இதற்காக தயாரிப்பு நிறுவனம் சிறப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் “Mission accomplished with precision!” என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News