அதிகப்படியான டிஸ்லைக்கள் பெற்ற டிரெய்லர்!

யு டியுபில் டிஸ்லைக் பார்வை எண்ணிக்கையைக் குறைப்பதால் மற்றும் யுடியூபர்களை இது ஊக்கமிழக்கச் செய்வதால்,  கடந்த 2021 ஆம் ஆண்உ யூடியுபில் டிஸ்லைக் எண்ணிக்கையை மறைத்து வைக்கும் முறை,  அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கு முன்வரை யூடியூபில் அதிக டிஸ்லைக்குகள் பெற்ற வீடியோக்கள் என ஒரு தனி பட்டியல் இருந்தது. இந்த வரிசையில் இரண்டாம் இடத்தில் உலக அளவில் ஒரு பாலிவுட் படத்தின் ட்ரெய்லர் இருந்தது.

ஆலியா பட் மற்றும் சஞ்ஜய் தத் ஆகியவர்கள் நடித்த சடக் (சாலை) படத்தின் இரண்டாம் பாகம் இது. 1991 ஆம் வெளிவந்த முதல் பாகத்தின் தொடர்ச்சி இந்தப் படம். பாலிவுட் திரைப்பட இயக்குனர் மஹேஷ் பட் 25 ஆண்டுகளுக்குப்பின் இயக்குநராக கம்பேக் கொடுத்த படம் இது.

இந்தப் படத்தில் அவரது இரண்டு மகள்களான பூஜா பட் மற்றும் ஆலியா பட் ஆகிய இருவரும் நடித்திருந்தார்கள். இவர்களுடன் மற்றொரு பிரபலத்தின் மகனான சஞ்ஜய் பட் தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரின் சகோதரரான ஆதித்யா ராய் கபூர் ஆகியவர்களும் நடித்திருந்தார்கள்.

முழுவதுமே பிரபலங்களின் வம்சாவழிகள் நடித்த இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை பயங்கரமாக சீண்டிவிட்டது. இதன் காரணத்தினால் அனைவரும் அந்த வீடியோவை டிஸ்லைக் செய்யத் தொடங்கினார்கள். உலகளவில் முதல் முறையாக 48 மணிநேரத்தில் கிட்டதட்ட 53 லட்சம் பேர் டிஸ்லைக் செய்த ஒரு படத்தின் ட்ரெய்லராக மாறி சடக் 2 படத்தின் ட்ரெய்லர் சாதனை புரிந்தது.