வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்து பெரும் வெற்றி பெற்றது மங்காத்தா படம். திரிசா, அர்ஜுன், லக்ஷ்மி ராய், அஞ்சலி , ஆண்ட்ரியா ஜெரமையா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்த படம் இது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன.
இதெல்லாம் விசயம் இல்லை… மங்காத்தா படத்தை துரை தயாநிதிதான் தயாரித்தார். அஜித்தும் இவரும் நல்ல நண்பர்கள்.
மீண்டும் இருவரும் இணைந்து மங்காத்தா 2 படத்தை உருவாக்கப் போகிறார்கள் என்கிற பேச்சு அடிபட்டது.
ஆனால் இப்போது புது தகவல் வெளியாகி இருக்கிறது. இருவரும் இணைந்து புதிய படத்தை உருவாக்கப்போவது உறுதிதான். ஆனால் மங்காத்தா 2 அல்ல.. புதிய படம் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.