அஜித், ஒதுங்கி இருப்பதன் ரகசியம் இதுதான்!: நடிகர் குணசேகரன்

அஜித், எந்த அளவுக்கு போராடி திரையுலகில் வெற்றி பெற்றார் என்பதை, நடிகர் குணசேகரன் கூறியிருக்கிறார். அஜித்திடம் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவர் இவர்.

இருவரும் அவ்வப்போது பைக்கில் ஒன்றாகப் போவதும், சூட்டிங் இல் சேர்ந்து இருப்பதும், மணிக்கணக்காக ஒருவரை ஒருவர் பேசிக் கொள்வதும், அடிக்கடி சந்தித்துக் கொள்வதும் உண்டு.

இவர் சமீபத்திய வீடியோவில், “அஜித்தின் உதவும் குணம் அனைவரும் அறிந்ததுதான். எனக்கும் அப்படியோர் சம்பவம் நடந்தது. என் மகனை பள்ளியில் சேர்க்க வேண்டிய நேரம்.. பணம் இல்லை. இதை அறிந்த அஜித்,
பள்ளி சம்பந்தப்பட்ட எல்லா விஷயத்தையும் கேட்டு  நேரடியாக இவர் போய் பணத்தை கட்டிவிட்டார்.  என் மகன், எட்டாம் வகுப்பு வரை அவர் தான் கட்டணம் செலுத்தினார்.

அனைவருடனும் எளிமையாக அன்பாக பழகுவார். ஒரு கட்டத்தில் அவர் சந்தித்த துரோகங்கள் அவரை ரணப்படுத்தி விட்டன. ஆகவேதான் பிறரிடம் பழகுவதை வெகுவாகக் குறைத்துக்கொண்டார்.

இறுக்கமான மனிதராகிவிட்டார். பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதும் கிடையாது.

தன்னுடைய குடும்பம் மட்டும் போதும் என நினைத்து வாழ்கிறார்.

ஆனால் அவரது வள்ளல் குணம் மாறவே இல்லை. அவரது வீட்டில் சுமார் 25 பேர் வேலை பார்க்கிறார்கள். அனைவருக்கும் அவரவர் ஏரியாவில் சொந்த வீடு கட்டிக்கொடுத்து இருக்கிறார்..  அவர்களின் பிள்ளைகளின் படிப்பு செலவையும் இப்போது வரை அஜித் தான் பார்த்து வருகிறார்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் மாரிமுத்து.