1997 -ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான உல்லாசம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருப்பார். இப்படத்தை ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கி இருந்தார்கள்.
இந்நிலையில் பேட்டியில் கலந்து கொண்ட ஜே.டி மற்றும் ஜெர்ரி சினிமாவின் நடந்த பல விஷயங்களை குறித்து பேசியுள்ளார். அதில், “உல்லாசம் படத்தை இயக்க ஆரம்பிக்கும் போது சில நண்பர்கள் அஜித் மற்றும் விஜய் இப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள்.
ஆனால் நடிகர் விக்ரம் என்னுடைய கல்லூரி நண்பர் அந்த நேரத்தில் அவர் சினிமாவில் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தார். அதனால் நாங்கள் விக்ரமை நடிக்கவைத்தோம்” என கூறியுள்ளனர்.
ஆக, விஜய் அஜித் சேர்ந்து நடிக்க இருந்தனர் என்பது புதிய செய்திதானே.
தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமா பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.