தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார் அஜித். வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கும் இப்படம் வழக்கம்போல பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இயக்குநர் வினோத், ‘இப்படத்தின் முழுக்கதையையும் அஜித்திடம் கூறவில்லை. ஒரே ஒரு காட்சியை மட்டுமே கூறினேன். அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அவருக்கு மிகவும் பிடித்த அந்த காட்சியை படத்தில் வைக்க முடியவில்லை. இதைக் கேட்ட அஜித் அதிர்ந்துவிட்டார். பிறகு, அக்காட்சியை வைக்காததற்கான காரணங்களைச் சொன்னேன். அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு அஜித் ஏற்றுக்கொண்டார்” என வினோத் தெரிவித்து உள்ளார்.