ராஜ்கிரணை நெகிழ வைத்த அஜித்!

கிரீடம் படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவத்தை சமீபத்தில் கூறினார் ராஜ்கிரண்:

“படப்பிடிப்பு இடைவேளையில் அஜித் நின்று கொண்டும் நடந்தபடியும் இருந்தார். நீண்ட நேரம் இப்படியே இருக்கிறாரே என, ‘உட்காருங்க தம்பி’ என்றேன். அதற்கு அவர், ‘எனக்கு ஆபரேசன் நடந்திருப்பதால், உட்கார்நதால் இடுப்பு வலிக்கும் அதனால்தான் நிற்கிறேன்’ என்றார்.

நான் பதறிப்போய்,  ‘இந்த படத்தின் தயாரிப்பாளர் உங்களை நன்கு அறிந்தவர்.. அவரிடம் சொல்லி ஒரு நாள் ஓய்வு எடுத்துவிட்டு நடிக்கலாமே’ என்றேன்.

அதற்கு அஜித், ‘என் ஒருவனுக்காக படப்பிடிப்பை நிறுத்தினால் பெரும் பணம் வீணாகும். உங்களைப்போல முக்கிய நடிகர்கள்.. துணை நடிகர்கள்.. டெக்னீசியன்கள் எல்லோருக்கும் நேரம் வேஸ்ட். அதனால் சிரமமப்பட்டாவது நடித்துவிடுவேன்’ என்றார் அஜித். அதே போல நடித்தும் முடித்தார். அவரது அர்ப்பணிப்பு உணர்வை கண்டு மிரண்டுவிட்டேன்” என்றார் ராஜ்கிரண்.