Wednesday, September 25, 2024

மீண்டும் கார் பந்தயத்தில் சீறிப்பாய போகும் அஜித்… ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வெளியான சூப்பர் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அறியப்படும் அஜித்குமார், அவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் “விடாமுயற்சி” என்ற திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது, ஆனால் இதுவரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இதற்கு மேலாக, “குட்பேட் அக்லி” எனும் படத்திலும் அஜித் நடித்து வருகிறார்.

நடிகர் அஜித் கார் மற்றும் பைக் ஓட்டுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர் என்பதும், அது அவரது ரசிகர்கள் அறிந்த உண்மையாகும். படப்பிடிப்பில் இருந்து இடைவெளி நேரம் கிடைக்கும் போதெல்லாம், தனது பைக்கை எடுத்துக் கொண்டு, நண்பர்களுடன் காரிலும் பைக்கிலும் பயணம் மேற்கொள்வதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில், அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் அஜித் மீண்டும் கார் பந்தையத்தில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, நடிகர் அஜித் குமார் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக இங்கிலாந்து, ஐரோப்பா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அணிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், விளம்பரதாரர்கள் இந்த முயற்சியை ஒருங்கிணைப்பதில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News