திட்டியவருக்கு உதவிக்கரம் நீட்டிய அஜீத்!

சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. பத்திரிகையாளர் ஒருவர் எப்போதுமே நடிகர் அஜீத் குறித்து எதிர்மறையான செய்திகளையே எழுதி வந்தார்.

அவர் ஒருமுறை அஜித்தை சந்திக்க சென்று பேசிக்கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில், ‘நான் அவசரமாக வெளியே செல்கிறேன்’ என்றார். அதற்கு அஜித் ‘அப்படியா? எந்த பக்கம் போகிறீர்கள்?’ என கேட்டார்.

அந்த பத்திரிக்கையாளர், “ எனக்கு இதய நோய்.  கடந்த வருடமே ஆபரேசன் செய்து இருக்க வேண்டும். போதிய பணம் இல்லாத காரணத்தினால் செய்ய முடியவில்லை.  அதனால், மருந்துகளை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன். இப்போது அந்த மருத்துவரை சந்திக்கத்தான் செல்கிறேன்” என்றார்.

உடனே அஜித் அந்த மருத்துரை தொலைப்பேசியில் அழைத்து பேசி சிகிச்சைக்கு எவ்வளவு பணம் செலவாகும் என கேட்டார். மருத்துவர் ஒன்றரை லட்சம் செலவாகும் என கூறினார்.

அஜித் அந்த மருத்துவரிடம்,  ‘அவரின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அதற்கான பணத்தை நான் தருகிறேன்’ என்றார்.

பொதுவாக திரையுலகில் தன்னை திட்டி விமர்சிப்பவர்களிடம் இருந்து  நடிகர்கள் விலகியே இருப்பார்கள்.

ஆனால், அஜித் வித்தியாசமான மனிதர்.. எதிராக எழுதியவருக்கும் உதவினார்.

இந்த சம்பவத்தை பத்திரிகையாளர் அந்தணன், ஒரு வீடியோ பேட்டியில் தெரிவித்தார்.