Thursday, April 11, 2024

சுடக் கற்றுக்கொடுத்த அஜித்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

துணிவு படத்தில் அஜித்துடன் மஞ்சுவாரியாரிம் நடிக்கிறார் என்பது தெரிந்த செய்தி.

வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து துணிவு படம் உருவாகி இருக்கிறது. துப்பாக்கி சுடும் காட்சிகலில் அஜித் தூள் பறத்தி இருக்கிறார். ஆச்சரியமான விசயம், இதுவரை ஆக்‌ஷன் படத்திலேயே நடிக்காத மஞ்சு வாரியாரும்
துப்பாக்கியை வைத்து சுடும் காட்சியில் அசத்தி இருக்கிறார்.

இது குறித்து  மஞ்சு வாரியார் அளித்த பேட்டியில், “எனக்கு துப்பாக்கி பிடிக்கவே தெரியாது. படங்களில் தான் பார்த்திருக்கிறேன். துப்பாக்கியை கையில் கொடுத்து ஆக்‌ஷன் என சொல்லிவிட்டார் இயக்குநர். எனக்கு  என்ன செய்வது என்று புரியவில்லை.

உடனே வேறு வழியில்லாமல் வெட்கத்தை விட்டு அஜித் சாரிடம் போய் தான் கேட்டேன்.  அவர்தான், எப்படி துப்பாக்கி பிடித்து சுடவேண்டும் சொல்லிக் கொடுத்தார்.  அதுவும் மிகவும் பொறுமையாக நிதானமாக எப்படி பிடிக்க வேண்டும் கையை எந்த இடத்தில் பிடித்து சுட வேண்டும் என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தார்” என்று சொல்லி இருக்கிறார் மஞ்சு வாரியார்.

- Advertisement -

Read more

Local News