Tuesday, July 2, 2024

  168 மணி நேரம்தூங்காமல் நடித்த அஜித்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஆச்சரியமான தகவல் ஒன்றை கூறினார்:

“நான் இயக்கிய வரலாறு படத்தில் அஜித் நடித்துக்கொண்டு இருந்தபோது, அவருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் போட்டுவிட்டார்கள். அதாவது, இந்த படத்தில் நடித்துவிட்டுத்தான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.

அவருக்கு அடுத்தடுத்த கமிட்மெண்ட்டுகள் இருந்தன. அவர், “இன்னும் எத்தனை நாள் படப்பிடிப்பு இருக்கிறது” என்று கேட்டார். நான், “15 நாள் இருக்கும்” என்றேன்.

அதற்கு அவர், “ஒரு வாரத்தில் முடித்துவிடுங்கள்.. நான் தினமும் நாள் முழுதும் நடித்துத் தருகிறேன்” என்றார்.

எனக்கு ஆச்சரியம்.. இது நடக்குமா.. அவரால் முடியுமா என்று ஒரு சந்தேகம். ஏனென்றால் பெரிய ஹீரோ.. அவர் எப்படி நாள் முழுதும் நடிப்பார்?

ஆனால், சொன்னபடி ஒரு வாரம் முழுதும் நடித்துக் கொடுத்தார். காலையில் படப்பிடிப்பு ஆரம்பித்தால் ராத்திரி முழுக்க நடக்கும். மறு நாள் காலையில் ஒரு மணி நேரம் வீட்டுக்குச் சென்று வருவார். மற்றபடி நடிப்பு, நடிப்பு.. நடிப்புதான்.

இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது” என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.

இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

- Advertisement -

Read more

Local News