நடிப்பை எனது பெற்றோர் மரியாதைக்குறைவாக பார்க்கின்றனர்! :ஐஸ்வர்யா லட்சுமி

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில், நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இவர் நடித்த  பூங்குழலி கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் “எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு டாக்டராகப் பயிற்சி எடுக்கும் போதே நடிகையானேன். சினிமா குறித்து எனது பெற்றோருக்கு எதிர்மறையான கருத்து உள்ளது. வெளியில் பார்த்ததையும் கேட்டதையும் வைத்து படம் குறித்து எனக்கு மோசமான கருத்து உள்ளது. நடிப்பை மரியாதைக்குரிய தொழிலாக கருதவில்லை. என்னுடைய சினிமா வாழ்க்கை எனக்கு இன்னும் பிடிக்கவில்லை” என்றார்.