Saturday, September 21, 2024

பார்க்கிங் படத்துக்கு பின்னர் லப்பர் பந்து படமும்ஹரிஷ் கல்யாண்-க்கு மற்றொரு அங்கீகாரமாக அமையும் – இயக்குனர் வெற்றிமாறன்! #LUBBERPANDHU

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ தயாரித்த ‘லப்பர் பந்து’ படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை ஆகும். இந்த படத்தை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எழுதி, இயக்கியுள்ளார். மேலும், இதில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஹரிஷ் கல்யாண், இந்த படத்தில் “அன்பு” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார், மற்றும் தினேஷ் ஒளிப்பதிவை செய்துள்ளார்.இந்நிலையில், படம் நேற்று வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தை பார்த்த பெரும்பாலானோர் சமூக வலைத்தளங்களில் படம் பற்றிய பாராட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

படத்தை பார்த்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவை அழைத்து பாராட்டினார். தற்பொழுது வெற்றிமாறன் படத்தைப் பார்த்து, படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அவருடைய பாராட்டு வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், வெற்றிமாறன் கூறியதாவது, சமீபத்தில் பார்த்த மிகவும் ஈர்க்கும் திரைப்படம் ‘லப்பர் பந்து’. எல்லாரும் தங்கள் பணிகளை மிகவும் அழகாக செய்திருக்கின்றனர், என்று தெரிவித்துள்ளார். இப்படம் ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்துள்ளது. ‘பார்க்கிங்’ திரைப்படத்திற்கு பிறகு, ஹரிஷ் கல்யாணுக்கு இது மேலும் ஒரு அங்கீகாரமாகி உள்ளது.

- Advertisement -

Read more

Local News