தெலுங்கு, இந்தியில் பிரபல நடிகையாக வலம் வரும் ஊர்வசி ரவுத்தேலா, தமிழில் ‘லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
தற்போது ஏஜென்ட் என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இதில் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தில் ஊர்வசி ரவுத்தேலா நடனம் ஆடியபோது அவரிடம் அகில் தவறாக நடக்க முயன்று தொல்லை கொடுத்ததாகவும், இதனால் அவரை முதிர்ச்சியற்றவர் என்று ஊர்வசி ரவுத்தேலா சாடியதாகவும் வலைத்தளத்தில் விமர்சகர் ஒருவர் தெரிவித்து இருந்தார்.
இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த நபர் மீது அவதூறு வழக்கு தொடர தனது வக்கீல் மூலம் ஊர்வசி ரவுத்தேலா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். “நீங்கள் சொன்னதுபோல் படப்பிடிப்பில் எந்த சம்பவமும் நடக்கவில்லை. தவறான தகவல் வெளியிட்ட உங்கள் மீது அவதூறு வழக்கு தொடர இருக்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.