1986ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான ‘காவேரி’ மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை சித்தாரா. அதன் பின்னர் மலையாளத் திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்துவந்த அவரை, இயக்குநர் கே. பாலசந்தர் தனது ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குக் கொண்டு வந்தார். அதன்பின் ‘புரியாத புதிர்’, ‘மாமியார் வீடு’, ‘பெற்றெடுத்த பிள்ளை’, ‘பொண்டாட்டியே தெய்வம்’, ‘நட்புக்காக’, ‘படையப்பா’, ‘ரன்’, ‘மாரீசன்’ போன்ற பல திரைப்படங்களில் சிறப்பாக நடித்துள்ளார். அதோடு, தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்துவருகிறார்.

தற்போது 52 வயதான சித்தாரா, திருமணம் செய்யாமல் இதுவரை சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். இதன் பின்னணியில் ஒரு சொல்லப்படாத காதல் கதை இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக அவரது தந்தையின் மறைவிற்குப் பிறகு குடும்ப பொறுப்புகளை முழுமையாக ஏற்றுக்கொண்ட சித்தாராவுக்கு, ஒரு கட்டத்தில் மனதிற்கு நெருக்கமான காதல் ஏற்பட்டதாகவும், ஆனால் அந்தக் காதல் நிறைவேறாததால் மனவேதனையுடன் திருமணம் செய்ய வேண்டாம் என்ற முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னரும் அதே முடிவில் அவர் நிலைத்து இருந்து வருகிறார் என்பது தகவல் வெளியாகியுள்ளது.

