மலையாளத் திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் சானியா ஐயப்பன். குழந்தை நட்சத்திரமாக தன் பயணத்தை தொடங்கிய அவர், தற்போது கதாநாயகியாக மாறி பல முக்கியமான படங்களில் நடித்துள்ளார். குயீன், பிரேதம், லூசிபர் போன்ற திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்ற இவர், தமிழிலும் இறுகப்பற்று, சொர்க்கவாசல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஒரு நபருடன் காதலில் இருந்ததாகவும், அதுகுறித்த செய்திகள் வெளியானபோதும் அதை மறக்கவில்லை என்றும் கூறியிருந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு திடீரென அவர் தனது காதல் முறிந்துவிட்டது என கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த நிலையில், அண்மைய ஒரு பேட்டியில், தனது பிரேக் அப்பிற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.
“நான் காதலித்த அந்த நபர் எப்போதுமே என்னிடம் சினிமா துறையில் பணிபுரியும் பெண்கள் நல்ல வாழ்க்கை துணை கிடைக்க மாட்டார்கள் என்றும், நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் சொல்லிக்கொண்டே இருந்தார்.நாம் யாரையாவது மனதார நேசிக்கிறோமோ, அவரிடமிருந்து இப்படியான வார்த்தைகளை கேட்பது மிகவும் வேதனையான ஒன்று. மேலும், நான் செய்கிற தொழிலை அவமதித்து பேசுவதை ஏற்க முடியவில்லை. அதனால் தான் எங்கள் காதல் முடிந்தது. இந்த மனவேதனையிலிருந்து மீள்வது எனக்கு மிகவும் கடினமான விஷயமாக இருந்தது. ஆனால், இப்போது நான் சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளேன்” என்று கூறியுள்ளார் சானியா ஐயப்பன்.