Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

12-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகை சமந்தா..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சமந்தா சினிமா துறையில் அறிமுகமாகி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆனதையொட்டி தனது ரசிகர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார்.

நடிகை சமந்தா 2010-ம் ஆண்டு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானார். இதன், பின்னர் ‘பாணாக் காத்தாடி“ படம் மூலம் தனி ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சமந்தா.

இதனைத் தொடர்ந்து, நான் ஈ’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘தீயா வேலை செய்யனும் குமாரு’, ‘24’, ‘அஞ்சான்’, ‘கத்தி’, ‘தெறி’ போன்ற படங்களில் சிம்பு, விக்ரம், விஜய், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

அப்படியே தெலுங்கு பக்கமும் சென்ற சமந்தா குறுகிய காலத்தில் அங்கேயும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து டோலிவுட்டில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக மாறிவிட்டார்.

நடிகை சமந்தா இன்று தனது சினிமா வாழ்க்கையின் 12-வது ஆண்டை இந்த வருடம் கொண்டாடுவதையொட்டி தனது சந்தோஷத்தை தனது சமூக வலைத்தளத்தில் செய்தியாகப் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “நான் இன்றுடன் இந்தச் சினிமா துறையில் காலடியெடுத்து வைத்து சரியாக 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 12 ஆண்டுகளிலும் லைட்ஸ், கேமரா,    ஆக்‌ஷன் என பல மறக்க முடியாத அனுபவங்களுடன் வாழ்ந்துள்ளேன்.

இங்கே ஒவ்வொரு தருணமும் எனக்கு மிகச் சிறந்த தருணமாகவே இருந்தது. மேலும், எப்போதுமே என் பக்கம் நிற்கும் உலகிலேயே மிகவும் விஸ்வாசமான ரசிகர்களை நான் பெற்றதே எனது பெரிய பாக்கியம்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News