Wednesday, September 18, 2024

பெண் குழந்தைகளுக்கு அம்மா ஆகிறாரா சமந்தா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல திரைப்பட நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  கருத்து வேறுபாடு காரணமாக 2021-ல் அவரை விட்டு  பிரிந்தார். அதன்  பிறகு பிஸியாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். எதிர்பாராத விதமாக நடித்துக் கொண்டிருக்கும் போது தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார்  நடிகை சமந்தா. அதற்காகச் சிகிச்சை பெற்று வருகிறார். சினிமாவில் இருந்து தற்போது விலகியிருக்கும் சமந்தா வெளிநாடுகளுக்குச் சென்றும் சிகிச்சை பெற்றுள்ளார். இன்னும் முழுமையாக அவர் குணமடையவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே  சமந்தா இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சமந்தா அதன் மூலம் பல உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் பல தரப்பட்ட நோய்களால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். இந்த அமைப்பின் மூலம் ஆதரவில்லாமல் இருக்கும் இரண்டு குழந்தைகளை அவர் தத்தெடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

- Advertisement -

Read more

Local News