Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

ரோஜாவுக்காக பாரதிராஜாவிடம் அடம் பிடித்த இயக்குநர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரையுலகின் டிரண்ட் செட்டர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.   தனது  பட ஹீரோயின்களுக்கு  “R” என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை வைப்பது அவரது வழக்கம்.

ராதா, ராதிகா, ரேவதி, ஆகியோரை  அறிமுகப்படுத்தும்போது இப்படித்தான் பெயர் வைத்தார். அவர்களும் வெற்றிகரமான ஹீரோயின்களாக வலம் வந்தனர்.

ஆனால் தான் அறிமுகப்படுத்தியவர்களோடு, வேறு இயக்குநர் அறிமுகப்படுத்திய ஒரு நடிகைக்கும் பாரதிராஜா பெயர் வைத்திருக்கிறார்.

அவர், நடிகை ரோஜா. இது குறித்து அவர் ஒரு பேட்டியில் தெரிவித்தபோது, “என் உண்மையான பெயர் ஸ்ரீலதா. 1991 ஆம் ஆண்டு  “பிரேம தபசு” என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானேன். படத்தை இயக்கிய  டாக்டர் சிவபிரசாத், இயக்குநர் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர். அவர், ‘இந்தப் பெண்ணுக்கும் நீங்கள்தான் பெயர் வைக்க வேண்டும்’ என்று உறுதியாகச் சொல்லி விட்டார். அடம்பிடித்தார் என்றே சொல்லலாம்.

அதன் பிறகு எனக்கு பாரதிராஜா வைத்த பெயர்தான் ரோஜா” என்று அவர் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News