கமல்ஹாசனுடன் தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை மீனாதான் என்றும் அதன்பிறகு அந்த கேரக்டரில் ரேவதி கமிட் ஆகி நடித்தாக தகவல் வெளியாக நிலையில், இது குறித்து நடிகை ரேவதி விளக்கம் அளித்துள்ளார்.
“மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது இயக்குனர் பரதன் நாளை மறுநாள் என்னை சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் ப்ரியதர்ஷன் சாரிடம் ஒருநாள் லீவு வாங்கிக்கொண்டு சென்றேன். அப்போது டிடிபியில் டைப் செய்த தேவர் மகன் ஸ்கிரிப் பேப்பரை என்னிடம் கொடுத்தார். எனக்கு ஒரு ஆச்சரியம். அப்போதே அந்த ஸ்கரிப்பை படித்தேன். கதை கமல்ஹாசன் சார் எழுதியது. உடனே ஒப்புக்கொண்டேன். இதுதான் நடந்தது” என்று தெரிவித்துள்ளார் ரேவதி.