கதை வசனகர்த்தா கலைஞானம் ஒரு பேட்டியில், “ எனது இயக்கத்தில் சுதாகர், ராதிகா, மனோரமா, சுருளிராஜன், ராஜராஜசோழன் உட்பட பலரும் நடித்து 1980களில் வெளியான படம் ‘எதிர்வீட்டு ஜன்னல் ’ திரைப்படம். இந்த திரைபடத்தில் நடிகை போன்றோர் நடித்திருந்தனர்.
படப்பிடிப்புக்காக சேலம் சென்றோம். அங்கு துர்கா ஓட்டலில் அறை எடுத்து அனைவரும் தங்கினோம். அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள சேலம் வந்தார்.
நாங்கள் துர்கா ஓட்டலில் தங்கி இருப்பதை அறிந்து அவரும் தனக்கு அதே ஓட்டலில் அறை போடச் சொல்லிவிட்டார்.
அன்று காலை, படப்பிடிப்புக்காக புறப்பட்டோம்.
எம்ஜிஆர், ‘இன்றைக்கு ஒரு நாள் படப்பிடிப்பை ரத்து செய்யுங்கள்’ என திடீரென சொல்லிவிட்டார். நாங்களும் குழம்பிப் போய் நிறுத்திவிட்டேன்.
என்னை அழைத்த அவர், படத்தின் கதையை கேட்டார். பிறகு, ‘படப்பிடிப்பு முடிந்ததும் ஃபர்ஸ்ட் காப்பியை முதலில் என்னிடம் தான் வந்து காட்டவேண்டும்’ என்றார்.
ஆனால் எதற்காக படப்பிடிப்பை ஒரு நாள் நிறுத்தச் சொன்னார், முதல் காப்பியை காண்பிக்கச் சொன்னார் என்பது தெரியவில்லை” என்றார் கலைஞானம்.