ராஷி கண்ணாவின் கவர்ச்சி படங்கள்!

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்து வருபவர் பிரபல நடிகை ராஷி கண்ணா. தெலுங்கு படம் ஒன்றின் மூலம் அறிமுகமான இவர், தற்போது தமிழில் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
‘அரண்மனை 3’, ‘திருச்சிற்றம்பலம்’, ஆகிய படங்களில் ராஷி கண்ணாவின் நடிப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘ஃபார்சி’ வெப் தொடரிலும் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதுதவிர சில புதிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். 
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா, படவாய்ப்புகளை பெற தொடர்ந்து போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கவர்ச்சி லுக்கில் புதிய படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இப்படி புகைப்படங்கள் வெளியிட்டால் நாங்க எப்படி நிம்மதியாக தூங்குவது என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.