பிரியசகி, இதய திருடன், திமிரு, நான் மகான் அல்ல, வாலிப ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நீலிமா ராணி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பலரும் பின் தொடர்கிறார்கள்.
தனது இன்ஸ்டா பக்கத்தில் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களையும் அடிக்கடி நீலிமா பகிர்ந்து வருகிறார். பலரும் வாழ்த்து தெரிவிக்கினறனர்.
ஆனால் சிலர், நீலிமா ராணியை இழிவாக பின்னூட்டம் இட்டு வருகின்றனர்.
இதனால் ஆத்திரமான நீலிமா தன்னையும், தனது குடும்பத்தினரையும் மோசமாக விமர்சித்தவர்களை பிளாக் செய்துள்ளதோடு, அந்த நபர்களின் பெயர்களை ஸ்கரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார்.
மேலும், ”என்னை சுற்றி எதிர்மறையான நபர்கள் நிறைய உள்ளனர் என்று தெரியும். இவர்களை எல்லாம் பொருட்படுத்தாமல் கடந்து செல்ல வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். அந்த நபர்களின் ஆத்மா அமைதி பெற பிரார்த்திக்கிறேன்” என்று பதிந்துள்ளார்.
‘தரமற்று பின்னூட்டம் இடுபவர்கள், மரணித்தவர்களுக்கு சமம் என்கிற அர்த்தத்தில், ஆத்மா அமைதி பெற பிரார்த்திப்பதாக பதிவிட்டு பதிலடி கொடுத்துவிட்டார் நீலிமா.. இது சரியான பதிலடி’ என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.