நடிகை லைலா கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.அதை தொடர்ந்து முன்னணி நடிகர்களான விக்ரம் அஜித்,சூர்யா, பிரசாந்த், ஆகியோருடன் பல வெற்றி படங்களில் நடித்தவர்.சினிமாவில் பிஸியாக இருக்கும் போதே ஈரான் நாட்டு தொழில் அதிபரான மெஹதீன் என்பவரை காதலித்து 2006 ஆம் திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு அவர் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என கூறியிருந்தார். நீண்ட ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் ’வதந்தி’ என்ற வெப் சீரிஸ் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் நான் நடித்ததில் என் கணவருக்கு பிடித்த படம் பிதாமகன். அதில் சூரியாவிடம் நான் சண்டை போட்டு தரையில் படுத்து உருளுவது போல் சீன் இருக்கும் அவருக்கு அந்த நடிப்பு ரொம்ப பிடிக்கும் என்றார் லைலா.