மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும், பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், “எனக்கு எல்லா ஹீரோக்களையும் பிடிக்கும். ஆனால் விஜய் சேதுபதிதான் என் ஃபேவரைட். அலட்டிக்கொள்ளாமல் இயல்பாக நடிப்பார்.
அவரிடமே இதைச் சொல்லி இருக்கிறேன். அதோடு, ‘வாய்ப்பு அமைந்தால் சொல்லுங்கள்.. உங்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும்’ என்கிற என் விருப்பத்தையும் சொன்னேன்” என்று தெரிவித்து இருக்கிறார் ஜான்வி.