ஓவியாவுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றவர் என்றால், அது லாஸ்லியாதான். பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து ரசிகர்களை உசுப்பேற்றினார்.
இவர் முன்பு அளித்த பேட்டி ஒன்றில், “இந்தியா.. அதுவும் தமிழ்நாடு எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனாலும் நான் பிறந்து வளர்ந்த இலங்கை மனதிலேயே நிற்கிறது. அங்குள்ள யாழ்ப்பாணம்தான் எங்கள் பூர்வீகம். அங்கிருந்து அவர்கள் திரிகோணமலை பகுதிக்கு வந்து வசித்தனர். நான் பள்ளிக் கல்வி எல்லாம் அங்குதான். பிறகு கொழும்புவில் மேற்படிப்பு சேர்ந்தேன்.
என் இள வயதில் ஆடி, ஓடிய திரிகோணமலைதான் மனதிலேயே நிற்கிறது. அங்கு மீண்டும் சென்று சில நாட்கள் தங்கி வரவேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என தெரிவித்து இருக்கிறார் லாஸ்லியா.