நடிகர் பாலியல் தொல்லை? ஹன்சிகா ஓப்பன் டாக்!

ஹன்சிகா மோத்வானி. 2007-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசமுருடு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு திரையுலகின் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

இந்நிலையில், ‘ஹன்சிகா சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது பிரபல நடிகர் ஒருவர் ஹன்சிகாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.  அவருக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் ஹன்சிகா நடந்து கொண்டார்’ என்று ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு ஹன்சிகா, “இது தவறான தகவல்.  ஒரு தகவலை வெளியிடும் முன் அதன் உண்மை தன்மையை அறிந்துகொள்வது நல்லது” என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.