பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, பிரபாஸுடன் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டிருந்தாலும், தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், உலகளவில் பெரும் கவனத்தை ஈர்க்கும் வகையில், மெட்டா ஏஐ (Meta AI) குரலுக்கு குரல் கொடுத்த முதல் இந்திய பிரபலமாக தீபிகா படுகோனே சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து தீபிகா தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டதாவது, “மெட்டா ஏஐயில் நானும் ஒரு அங்கமாகி உள்ளேன். இனி நீங்கள் என் குரலில் ஆங்கிலத்தில் வாய்ஸ் சேட் செய்ய முடியும்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த இணைப்பு மூலம் வாட்ஸ்அப், ரேபான் மெட்டா ஸ்மார்ட் கண்ணாடிகள், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற மெட்டா தளங்களில் தீபிகாவின் தனித்துவமான குரல் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஜான் சீனா, ஜூடி டென்ச் போன்ற சர்வதேச பிரபலங்கள் மெட்டா ஏஐக்கு குரல் வழங்கியிருந்தனர். தற்போது அந்த பட்டியலில் தீபிகா படுகோனேவும் இணைந்துள்ளார்.இந்த மேம்படுத்தப்பட்ட வசதி இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.