ரூ.190 கோடிக்கு பங்களா வாங்கிய நடிகை!

பிரபல இந்தி கவர்ச்சி நடிகையான ஊர்வசி ரவுத்தேலா மும்பை மையப்பகுதியில் வாங்கி இருக்கும் புதிய பங்களா பற்றித்தான் பட உலகில் பரபரப்பான பேசப்படுகிறது.  இந்த பங்களா 4 மாடிகளை கொண்டது.

பங்களாவை சுற்றிலும் அழகிய தோட்டம், நீச்சல் குளம், யோகா மையம், உடற்பயிற்சி கூடம் போன்றவை உள்ளன. கடந்த 6 மாதங்களாக வீடு வாங்க மும்பையில் பல இடங்களில் தேடி அலைந்து இறுதியில் இந்த பங்களாவை ஊர்வசி ரவுத்தேலா வாங்கி இருக்கிறாராம். இந்தியில் முன்னணி நடிகர் நடிகைகளாக இருப்பவர்கள் கூட அதிகபட்சம் ரூ.100 கோடி ரூ.120 கோடிக்கு மட்டுமே வீடுகள் வாங்கி உள்ளனர்.

இந்த நிலையில் குறைந்த படங்களில் மட்டுமே நடித்துள்ள ஊர்வசி ரவுத்தேலா 29 வயதிலேயே ரூ.190 கோடி பங்களாவை வாங்கியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இது குறித்து ஊர்வசி ரவுத்தேலா, “நீண்டகாலமாகவே இது போன்ற ஒரு வீடு வாங்க நினைத்தேன். இப்போதுதான் அந்த கனவு நிறைவேறி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.