Touring Talkies
100% Cinema

Wednesday, August 6, 2025

Touring Talkies

“சூர்யா ஒரு நடிப்பு ராட்சசன்” என்கிறார் நடிகை அபர்ணா பாலமுரளி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள அபர்ணா பாலமுரளிக்கு ‘சூரரைப் போற்று’ அவர் நடித்த மூன்றாவது தமிழ் திரைப்படம்.

அந்தப் படத்துக்கு முன்னால் ‘8 தோட்டாக்கள்’, ‘சர்வம் தாள மயம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ள அபர்ணா “சுதாவின் இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்தது என்னால் என்றும் மறக்க முடியாத ஒரு அனுபவம்” என்கிறார்.

சூர்யாவைப் பற்றி குறிப்பிடும் போது “அவருடைய எல்லா படங்களுமே எனக்கு பிடிக்கும் என்றாலும் அவருடைய ‘வாரணம் ஆயிரம்’ படமும் ‘பிதாமகன்’ படமும் என்னை மிகவும் கவர்ந்த படங்கள்” என்று சொல்கின்ற அபர்ணா,
“சூர்யாவை ‘ஒரு நடிப்பு ராட்சசன்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

சூரரைப் போற்று’ படத்தில் நடிக்கும்போது பக்கத்திலே இருந்து அவருடைய அர்ப்பணிப்பை பார்க்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிகச் சிறந்த நடிகராக இருந்தாலும் தன்னுடன் நடிப்பவர்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வார் சூர்யா..” என்கிறார்.

“ஆர்கிடெக்சர் படித்துள்ள அபர்ணாவுக்கு நன்கு பாடவும் தெரியும். இந்த விஷயம் இசையமைப்பாளர் இமானுக்கு இன்னும் தெரியாது போலிருக்கிறது. தெரிந்தால் நிச்சயமாக அடுத்த படத்திலேயே அபர்ணாவை பாடகி ஆகிவிடுவார். நடிகைகளை பாடகிகள் ஆக்குவதில் அவர்தானே ஸ்பெஷலிஸ்ட் என்கிறார்” ஒரு திரை விமர்சகர்.

- Advertisement -

Read more

Local News