Touring Talkies
100% Cinema

Wednesday, April 9, 2025

Touring Talkies

‘ஆலப்புழா ஜிம்கானா’ படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்துள்ள நடிகை அனகா ரவி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நஸ்லென், தற்போது ‘ஆலப்புழா ஜிம்கானா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் லுக்மான் அவரன், கணபதி, சந்தீப் பிரதீப், அனகா ரவி, கோட்டயம் நஸீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. மம்முட்டி நடித்த ‘உண்ட’ மற்றும் டொவினோ தாமஸ் நடித்த ‘தள்ளுமால’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் காலித் ரஹ்மான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை அனகா ரவி, நடாஷா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பணிபுரிந்த அனுபவங்களை நடிகை அனகா ரவி பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது: “இயக்குநர் ரஹ்மான் சார், ‘அடி வாங்க தயாரா?’ என்று என்னிடம் இரண்டு, மூன்று முறை கேட்டார். ஏனெனில், இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் குத்துச்சண்டையை மையமாகக் கொண்டது. எனவே அந்த கதையின் நெடுமையையும், காட்சிகளின் கடினத்தன்மையையும் மனதளவில் மற்றும் உடல் ரீதியாக சமாளிக்க வேண்டியிருந்தது. இதற்காக எனக்கு நிறைய பயிற்சி தேவைப்பட்டது” என்றார். அனகா ரவி, மம்முட்டி நடித்த ‘காதல்: தி கோர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அந்தப் படத்தில் அவர், மம்முட்டியின் மகள் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News