Touring Talkies
100% Cinema

Friday, March 28, 2025

Touring Talkies

தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் கியூட் கிளிக்ஸ்-ஐ வெளியிட்ட நடிகை அமலாபால்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை அமலா பால் தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி தென்னிந்திய சினிமா உலகத்திலும் மிகவும் முக்கியமான நடிகையாக உள்ளார். அவர் தமிழ் சினிமாவில் ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும், அவரது திறமையான நடிப்பு அவரை விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றும் அளவிற்கு உயர்த்தியது.

2023ஆம் ஆண்டு, அமலா பால் தனது நெருங்கிய நண்பரான தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் மிகுந்த மகிழ்ச்சியான ஒன்றாக நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பே அவர்கள் சென்ற அவுட்டிங்கின் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். தற்போது, அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன் இலாய் உடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் அவர் மகனை கொஞ்சுவதும், மகனுடன் விளையாடுவதும் காணப்படுகின்றன. அதோடு, மகனை நிற்கவைத்துப் நடை பயிற்சி வழங்கும் விதமாகவும் சில படங்கள் உள்ளன. தற்போது இலாய்க்கு 9 மாதங்கள் ஆகின்றது. இதனால், குழந்தை நடக்க முயற்சி செய்யும் இந்த நேரத்தில் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ரசிகர்களும் இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவில் லைக்குகள் கொடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News