மலையாளக் கரையோரத்தில் இருந்து தமிழ் திரையுலகுக்கு வந்து முத்திரை பதித்தவர்களுள் ஒருவர் அமலா பால்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், “பல ஊர்களுக்கு, இடங்களுக்குச் சென்று இருக்கிறேன். ஆனால் என் மனதுக்குப் பிடித்த இடம் பாண்டிச் சேரி கடற்கரைதான். அங்கே மணல் இருக்காது. கடல் அரிப்பை தடுக்க பாறாங்கற்களை போட்டிருப்பார்கள். அதில் அலைகள் மோதுவைதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். விழித்துக்கொண்டே தியானம் இருப்பது போல எனக்குத் தோன்றும். மறக்க முடியாத இடம் பாண்டிச்சேரி கடற்கரை” என கூறி இருக்கிறார் அமலா பால்.