கேரளாவில் இருந்து வந்து, தமிழ் திரையுலகிலும் முக்கிய இடத்தைப் பிடித்து இருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் நடித்த. ஆக்ஷன் மற்றும் ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்கள் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி படங்கள் இவருக்கு பெரிய பிரேக் கொடுத்து உள்ளது.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், “சிறு வயதில் குடும்பத்துடன் ஊட்டி சென்றேன். அப்போது நான் ஏழாவது படித்துக்கொண்டு இருந்தேன். ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்ற போது குடும்பத்தில் இருந்து பிரிந்துவிட்டேன். காணாமல் போனதே தெரியாமல், நான் பாட்டுக்கு சுற்றித் திரிந்தேன். கிட்டதட்ட ஒரு மணி நேரம் என் பெற்றோர் பதறித் தேடி என்னைக் கண்டு பிடித்தார்கள். மறக்க முடியாத சம்பவம் அது” என்றார் ஐஸ்வர்யா லட்சுமி.