Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

நடிகர்கள் சம்பள சர்ச்சை!: அப்போதே விஜயகாந்த் சொன்னது என்ன?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைத் துறையில்  முக்கிய நடிகர்களின சம்பளம் குறித்த  சர்ச்சை தொடர்ந்து நடந்து வருகிறது.  இது குறித்து பலரும் விவாதித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சம்பளம் குறித்து நடிகர் விஜயகாந்த் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.. அதுவும் பல வருடங்களுக்கு முன்பே!

“முதலில்  அனைவரும் ஒரு விசயத்தைப்  புரிந்துகொள்ள வேண்டும். சம்பளம் என்பதை நடிகர்களாகிய நாங்கள் உயர்த்துவது கிடையாது. சம்பளத்தை  நிர்ணயம் செய்வது அந்த நடிகரின வியாபாரம்தான்.

உதாரணமாக ஒரு குறிப்பிட்ட   படம் நன்றாக ஓடிவிட்டது என்று வைத்துக் கொள்வோம்….  அந்த படம் எதனால் ஓடியது என்பது குறித்தெல்லாம் எவராலும் கணிக்க முடியாது. ஆனால், தயாரிப்பாளர்கள் அந்த ஹீரோவை மொய்த்துவிடுகிறார்கள்

அந்த ஹீரோவை முதலில் அணுகும் ஐந்து தயாரிப்பாளர்கள் 50,000 ரூபாய் சம்பளம் பேசுகிறார்கள் என்றால், ஆறாவதாக போகும் தயாரிப்பாளர் 1 லட்சம் சம்பளம் பேசி அந்த நடிகரை புக் செய்துவிடுகிறார்.

 இவ்வாறு தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களுமே ஹீரோவின் சம்பளத்தை நிர்ணயிக்கிறார்கள்.. உயர்த்துகிறார்கள்” என்று அப்போதே தெரிவித்து இருக்கிறார் விஜயகாந்த்.

- Advertisement -

Read more

Local News