தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் தற்போது ‘மகுடம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதலில் இப்படத்தை ரவி அரசு இயக்கி வந்த நிலையில், தற்போது ‘மகுடம்’ படத்தை தானே இயக்கப்போவதாக விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இதன் மூலம் விஷால் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.
இந்நிலையில், ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் டப்பிங் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் இன்று ‘மகுடம்’ படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

