Friday, November 22, 2024

நடிகர் விமலுக்கு விநியோகஸ்தர்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பசங்க’ படத்தில் அறிமுகமாகி ‘களவாணி’, ‘கலகலப்பு’, ‘மஞ்சப் பை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என தொடர் வெற்றி படங்களில் நடித்தவர் நடிகர் விமல்.

அதனை தொடர்ந்து இஷ்டம்’, ‘அஞ்சல்’, ‘புலி வால்’  என அவர் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவின. இதனால் மன்னர் வகையறா’ என்ற படத்தை தானே சொந்தமாகத் தயாரித்தார் விமல்.

அந்தப் படத்தின் பட்ஜெட் எகிறியதால் பெரும் கடன் சுமைக்கு ஆளான விமல், பட விநியோகஸ்தர்களிடம் பெரும் தொகையை அட்வான்ஸாகவும், கடனாகவும் வாங்கி அந்தப் படத்தை வெளியிட்டார். ஆனால், இந்தப் படமும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

ஒரு வருடத்திற்குள் 6 படங்களில் நடித்து மொத்தக் கடனையும் அடைத்து விடுவதாக விமல் உறுதி கூறியதால் மன்னர் வகையறா’ படத்துக்கு முன் பணம் கொடுத்திருந்த விநியோகஸ்தர்கள் அந்தப் பணத்தை உடனடியாக கேட்காமல் பொறுமை காத்தனர்,

கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக 10-ம் மேற்பட்டபடங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிய விமல் கடன் கொடுக்க வேண்டியவர்களுக்கு குறைந்தபட்ச தொகையைக்கூட கொடுக்கவில்லை. இன்றுவரை மன்னர் வகையறா’ படத்துக்கு பெற்ற முன் பணத்தையும் விமல் செட்டில் செய்யவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் விமலின் நடிப்பில் வெளியான கன்னி ராசி’ படம் தமிழகம் முழுவதும் 23 லட்சம் மட்டுமே வசூல் செய்தது. படத்தை திரையிட க்யூப் நிறுவனத்திற்கு கட்டிய பணம் இதைக் காட்டிலும் அதிகமாம்.

இந்நிலையில் புதிய தயாரிப்பாளர்கள் தன்னை தேடி வராததால், தன் சம்பளத்தை ரூ.50 லட்சத்திலிருந்து  ரூ.25 லட்சமாக குறைத்து கொண்டு  ‘குலசாமி’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் விமல்.

இதனை கேள்விப்பட்ட மன்னர் வகையறா’ பட வெளியீட்டுக்கு அதிக பணம் கொடுத்திருந்த கோவை, சென்னை, திருச்சி பகுதி விநியோகஸ்தர்கள் தங்களுக்கு விமல் தர வேண்டிய ரூ.3.5 கோடியை வசூலித்து தருமாறு தங்களது சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனராம்.

இதன் காரணமாக நடிகர் விமல் நடித்து முடித்துள்ள, நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் வியாபாரம் கேள்விக்குள்ளாகியுள்ளது. அதோடு, அந்தப் படங்கள் வெளியீ்ட்டின்போது மிகப் பெரிய சிக்கலைச் சந்திக்க நேரும் என்று திரையுலகத்தில் பேச்சு எழுந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News