மாளவிகா மோகனனின் இந்த அழகு படத்தை எடுத்த ஹீரோ யார் தெரியுமா?

பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார் மாளவிகா மோகனன். அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம்
இந்த நிலையில், தங்கலான் படத்தின் படப்பிடிப்பின் ஓய்வு நேரத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை மாளவிகா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தினை நடிகர் விக்ரம் எடுத்ததுள்ளார் என்பதுதான் ஆச்சரியமான செய்தி.
இது குறித்து மாளவிகா, “பாம்புகள், ஏணிகள் மற்றும் நிழல்கள். படப்பிடிப்பில் இருந்து ஒருநாள் ஓய்வு கிடைக்கும்போது நம்முடன் ஒரு அசாத்தியமான புகைப்பட கலைஞர் இருந்தால்..” என நடிகர் விக்ரமை டேக் செய்து பதிவிட்டு உள்ளார்.