Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

இயக்குநர் K.V.குகனின் ‘WWW’ படத்தின் டீஸரை விஜய் சேதுபதி வெளியிட்டார்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குநர் K.V.குகனின் இயக்கத்தில், ஆதித் அருண், ஷிவானி ராஜசேகர் நடிக்கும் பன்மொழி திரில்லர் திரைப்படமான  WWW (Who, Where,Why) படத்தின், டீஸரை நடிகர் விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டார்.  

இது குறித்து ஒளிப்பதிவாளர், இயக்குநர் K.V.குகன் பேசும்போது, “எங்களது படமான WWW(Who,Where,Why) படத்தின் டீஸரை, நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டதில் எங்கள் அனைவருக்குமே பெருமை.

படத்தின் டீஸர் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் குறித்து நிறைய விசயங்களை ஆவலுடன் கேட்டறிந்தார். படத்தில் நடித்துள்ள மூத்த நடிகர்களான டாக்டர் ராஜேசேகர், ஜீவிதா தம்பதியின் மகள், ஷிவானி ராஜசேகருடைய நடிப்பையும், அவரது திரைப்பயணம் சிறப்பாக அமையவும் வாழ்த்துக்களை கூறினார் விஜய் சேதுபதி.

நடிகர் ஆதித் அருணை அவருக்கு நெடுங்காலமாக தெரியும். நடிப்பின் மீதான ஆதித் அருணின் தீவிரமான காதலையும் கடின உழைப்பையும் வெகுவாக பாராட்டினார். முழுப் படத்தில் அவரது  நடிப்பை காண ஆவலாக இருப்பதாகச் சொன்னார் விஜய் சேதுபதி..” என்றார் இயக்குநர் கே.வி.குகன்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும்  இப்படத்தினை இயக்குவதுடன் படத்தின் திரைக்கதையை எழுதி ஒளிப்பதிவும் செய்துள்ளார் இயக்குநர் K.V.குகன்.

Ramantra Creations சார்பில் தயாரிப்பாளர்கள் Dr.ரவி, P.ராஜு டட்லா இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். விஜய் தரன் டட்லா இணை தயாரிப்பு செய்திருக்கிறார்.

தொடர்ச்சியாக வெற்றிகரமான ஆல்பங்களை தந்து வரும் சைமன்.K.கிங் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தம்மிராஜு படத் தொகுப்பு செய்ய, K.N.விஜயகுமார் வசனமெழுதியுள்ளார். பிரேம் ரக்‌ஷித் நடன அமைப்பு செய்ய, மதன் கார்க்கி, கு.கார்த்திக் பாடல்கள் எழுதியுள்ளனர்.

படம் விரைவில் வெளியாகவுள்ளது..!

- Advertisement -

Read more

Local News