“நடிகை கவுதமி மிக, மிக சிறப்பான நடிகை. உடன் நடிக்கும் நடிகர்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுப்பார்…” என்று புகழ்ந்து தள்ளுகிறார் நடிகர் விஜய் கிருஷ்ணராஜ்.
ஒரு வீடியோ இணையத்தளத்திற்கு அவர் கொடுத்த பேட்டியில் இது பற்றிச் சொல்லியிருக்கிறார்.
“சந்தனக் காற்று’ படத்தில் நான் வில்லனாக நடித்திருந்தேன். அந்தப் படத்தில் விஜயகாந்த், கவுதமிதான் நாயகன், நாயகியாக நடித்திருந்தனர்.
அந்தப் படத்தில் நடிக்கும்போதுதான் கவுதமியை கூர்ந்து கவனித்தேன். ரொம்பவும் டெடிகேஷனான நடிகை அவங்க. ரொம்ப படிச்சவங்க. ஆனால் தன்மையா பேசுவாங்க. பழகுவாங்க. சக நடிகர், நடிகைகளுக்கு நிரம்ப ஒத்துழைப்பு கொடுப்பாங்க.

அந்தப் படத்தோட கதைப்படி கவுதமியை நானும் இன்னும் 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவிடுவோம். அந்தக் காட்சில நடிக்கும்போது அவங்களே எனக்கு தைரியம் சொல்லி.. ‘அப்படி நடிங்க’.. ’இப்படி நடிங்க’ என்று அட்வைஸ் செஞ்சாங்க. அந்தக் காட்சில எனக்கு இருந்த தயக்கத்தையெல்லாம் உடைச்சு ‘இப்படி நடிச்சுிருங்க’ என்று சொல்லிக் கொடுத்தவர் கவுதமிதான். இந்த அளவுக்கு நடிப்புல கவனமா இருந்தாங்க.
ஆனால், அவங்க கமல்ஹாசனை விட்டுப் பிரிந்தது எனக்கு வருத்தம்தான். ஏன்னா கவுதமி சச் எ வொண்டர்புல் வுமன். ஏன் கமல்ஹாசன், கவுதமியை மிஸ் பண்ணினாருன்னு தெரியலை..” என்று பெரிதும் வருத்தப்பட்டிருக்கிறார் நடிகர் விஜய் கிருஷ்ணராஜ்.