Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

‘வாரிசு’ எவ்வளவு நேரம்? டிரெய்லர் எப்போது? : நியூ அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடிப்பில் தயாராகியுள்ள படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இப்படத்தை, தில் ராஜூ தயாரித்து இருக்கிறார்.  ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் குஷ்பு, சரத்குமார், யோகிபாபு, ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

இன்று (ஜனவரி 3) காலை தணிக்கை குழு முன் வாரிசு படம், திரையிடப்பட்டது.  படத்தைப் பார்த்த தணிக்கை குழு படத்திற்கு யு சான்றிதழ் அளித்துள்ளது.

படத்தின் நீளம் 2 மணி நேரம் 49 நிமிடம். 

இந்நிலையில், வாரிசு படத்தின் டிரைலருக்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

டிரெய்லர் ஜனவரி 2-ந் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் அன்று வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், தற்போது டிரெய்லர் வெளியிடும் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

அதன்படி நாளை (ஜனவரி 4) மாலை 5 மணிக்கு வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று, படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில்  உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

Read more

Local News