தமிழ்ச் சினிமாவின் மிக முக்கியமான நாயகர்களில் ஒருவரான சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அவரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று இரவு அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில்,
“கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணை நிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்…”
என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சூர்யா லாக் டவுன் தளர்த்தப்பட்ட பிறகு ‘சூரரைப் போற்று’ படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக மட்டுமே வெளியில் வந்தார். அதற்குப் பிறகு சத்தமில்லாமல் அவர் தயாரித்து வரும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருவதாகச் செய்திகள் மட்டுமே வந்தது.
சமீபத்தில் அவருடைய சொந்தத் தயாரிப்பில் உருவாகும் படத்தின் பூஜை நிகழ்வில்கூட கலந்து கொள்ளவில்லை. அதற்கான காரணம் என்னவென்று இப்போதுதான் தெரிகிறது.
சூர்யாவின் அப்பாவான நடிகர் சிவக்குமாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கடந்த மாதம் ஒரு செய்தி வெளியில் பரவியது. ஆனால், அவரும் மைல்டான பாதிப்பில் இருந்து நான் மீண்டுவிட்டேன் என்று தகவல் தெரிவித்தார்.
இப்போது நடிகர் சூர்யா கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்திருப்பதாக அறிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா பூரண உடல் நலம் பெற்று திரும்ப வாழ்த்துகிறோம்.