மலையாள திரைப்படத் துறையில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் சவுபின் ஷாகிர். ‘பிரேமம்’, ‘சார்லி’, ‘மகேஷின்டே பிரதிகாரம்’, ‘கம்மாட்டிபாடம்’, ‘பரவா’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘வைரஸ்’, ‘டிரான்ஸ்’, ‘கோல்டு’, ‘கிங் ஆப் கோத்தா’, ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ போன்ற பல முக்கிய திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்துவிட்டார். இந்தப் படத்தில் நாகார்ஜுனாவுடன் நடித்த அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
“நாகார்ஜுனா சார், உங்களைப் பற்றி அறிந்ததும், உங்களுடன் பணியாற்றியதும் எனக்கு பெருமையாக இருந்தது. ‘கூலி’ படத்தில் உங்களுடன் சில சிறந்த நேரங்களை கழித்தேன். நீங்கள் காட்டும் எளிமை, ஸ்டைல், ஸ்வாக் அனைத்தும் உங்களால் உருவானவை. படப்பிடிப்பில் இருந்து திரும்பிய பிறகும் உங்களைப் பற்றி பேசுவதையும், உங்களை ஒரு ரசிகராகவே நினைப்பதையும் இன்னும் நிறுத்த முடியவில்லை. நம்முடைய பாதைகள் மீண்டும் சந்திக்கும் என நம்புகிறேன்,” என அவர் பாராட்டியுள்ளார்.