கமலுக்கு 90 நாள்.. ரஜினிக்கோ மூன்ற நாள்!

சமீபத்தில் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற சிவகுமார் ஒரு சில விஷயங்களை பற்றி மனம் திறந்து பேசினார்.

அப்போது நடிகர்கள் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் பற்றியும் ஒரு சில விஷயங்களை அந்த மேடையில் பகிர்ந்து இருந்தார்.

“ பாரதிராஜா இயக்கத்தில் கமல் மற்றும் ரஜினிகாந்த் நடித்த பதினாறு வயதினிலே திரைப்படத்தில் கமல் ஹீரோவாகவும், ரஜினிகாந்த் வில்லனாகவும் நடித்திருந்தார்கள். கமல் கிட்டத்தட்ட  மூன்று மாதங்களாக அந்த சப்பானி கதாபாத்திரத்தில் கஷ்டப்பட்டு நடித்தார். ஆனால் ரஜினி பரட்டை எனும் கதாபாத்திரத்தில்  மூன்று நாள் மட்டுமே நடித்தார். அதுவும் ஹீரோயினை வன்கொடுமை செய்யும் வில்லனாக நடித்திருப்பார்.

ஆனால் படம் ரிலீசான போது ஹீரோவாக நடித்த கமலைவிட,   பரட்டையாக நடித்த ரஜினிகாந்தை அதிகமாக கொண்டாடினர். அப்படி ஒரு வரவேற்பு கிடைத்தது.

அதே போல புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் எனக்கு பெரிய கேரக்டர். ரஜினிக்கு சிறிய கதாபாத்திரம். ஆனால், அவரது கதாபாத்திரம்தான் அதிகமாக பேசப்பட்டது.

ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரமாக ஆக வேண்டும் என்பது அவர் தலையில் எழுதப்பட்ட எழுத்து.  அதை யாராலும் மாற்றி இருக்க முடியாது” என்றார்.